உள்ளத்தின் ஆழம் பொங்குதே - Ullaththin aazham pongudhe

உள்ளத்தின் ஆழம் பொங்குதே

உத்தமரே உம் அன்பினால்

பாத்திரம் நிரம்பி வழியுதே

உன்னதத்தின் ஆவியினால்

துதிப்பேன் களிப்பேன் மகிழ்வேன்

மன்னவன் மார்பினிலே அல்லேலூயா

2. நேசத்தின் உச்சிதம் நேசரே

கரையில்லையே உம் அன்பிற்கே

கல்வாரி தரிசனம் தந்தீரே

கருணையாய் பேசினீரே

3. ஆனந்தக் கண்ணீர் நதியாக

ஊற்றிடுவேன் உந்தன் பாதத்தில்

பொன்முகம் நோக்கி பார்த்துமே

பூரிப்பாய் வாழ்ந்திடுவேன்

4. ரசத்தினால் பீறிடும் துருத்தி போல்

உம் அன்பென்னை நெருக்கி ஏவுதே

ஊழியம் செய்யத் தியாகமாய்

தந்தேன் உம் சேவை செய்ய

உள்ளத்தின் ஆழம் பொங்குதே - Ullaththin aazham pongudhe

Ullaththin aazham pongudhe

Uththamarae um anbinaal

Paaththiram nirampi vazhiyudhe

Unnadhaththin aaviyinaal

Thuthippen kalippen magizhven

Mannavan maarbinile alleluya

Nesaththin uchidham nesarae

Karayillaiye um anbirkke

Kalvaari darisanam thandheer

Karunaiyai pesineere

Aanandha kanneer nadhiyaaga

Oottriduveen unthan paadaththil

Ponmugam nokki paarththume

Poorippai vaazhnthiduveen

Rasaththinaal peeridum thuruththi pol

Um anbenai nerukki aevudhe

Oozhiyam seyya thyaagamaa

Thandhen um sevai seiyya